
| சுனன் தாரிமி இன்டெக்ஸ் |
Unicode Page |
|
மொழிபெயர்ப்பு: அபூஅம்னா முபாரக் மஸ்ஊது மதனி
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்:
ஹதீஸ் கிரந்தங்களில் புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயி, அபூதாவூது, பைஹகீ ஆகியவை ஹதீஸ் வரிசையில் ஹதீஸ் தொகுப்பு நூலாக திகழும் நூல் 'சுனன் தாரிமி' எனும் நூல், இந்நூலைப் பற்றி குறிப்பிடுகையில் ஹதீஸ் துறையைச் சேர்ந்த சிலர் முஸ்னத் என்றும் பலர் சுனன் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஸஹாபாக்களின் பெயரின் கீழ் தொகுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட ஹதீஸ் நூல்களுக்கு 'முஸ்னத்' என்று சொல்லப்படும்.
தனித்தனி தலைப்புகளின் கீழ் தொகுக்கப்படும் ஹதீஸ் நூல்களுக்கு 'சுனன்' என்று கூறப்படும். இங்கு இந்நூலை சுனன் என்று கூறுவதே பொறுத்தமாகும். எனவே தான் இதற்கு 'சுனன் தாரிமி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுனன் என்று குறிப்பிட்டாலே நம்முடைய நினைவிற்கு வருவது 'சுனன் நஸயி, சுனன் திர்மிதி, சுனன் அபூதாவூது, சுனன் இப்னுமாஜா' ஆகிய நூல்கள் தான். ஹதீஸ் துறையைச் சேர்ந்த அஷ்ஷைக் ஸலாஹுத்தீன் அல் அலாயீ என்பவர் அந்நூலைப் பற்றி குறிப்பிடுகையில் 'இந்நூல் இப்னுமாஜா நூலிற்கு முன்பு தொகுக்கப்பட்டிருந்தால் இப்னுமாஜா இடத்தை சுனன் தாரிமி பெற்றிருக்கும்' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு சிறந்த நூலாக திகழும் காரணத்தினாலும், மேலும் பெருமளவு ஆதாரமான ஹதீஸ்களைக் கொண்டதாலும் இதை தமிழ் கூறும் மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளோம்.
இமாம் தாரிமி அவர்கள் ஹிஜ்ரி 181 ம் ஆண்டில் சமர்கந்த் எனும் ஊரில் பிறந்தார்கள். இவர்களுடைய இயற்பெயர் அப்துல்லாஹிப்னு அப்துர்ரஹ்மான் என்பதாகும். தூரிமி இப்னுமாலிக் இப்னு ஹன்ழலா எனும் இவர்களுடைய முன்னோர்களின் பெயரை வைத்து இமாம் அவர்களுக்கு சூட்டப்பட்ட பெயர் தான் தாரிமி என்பது. அப்பெயரைக் கொண்டே இந்நூலிற்கு பெயரிடப்பட்டுவிட்டது.
இமாம் தாரிமி அவர்கள் பொறுமை, அறிவு, மனப்பாடத்திறன், வணக்கவழிபாடு, பேணுதல் போன்றவற்றில் இவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதியாகத் திகழ்ந்தார்கள். ஹதீஸ்களை சேகரிப்பதற்காக எகிப்து, சிரியா, இராக், மக்கா, மதீனா போன்ற பல இடங்களுக்கும் சென்றுள்ளார்கள்.
இமாம் அவர்கள் ஹிஜ்ரி 255 ம் ஆண்டில் துல்ஹஜ் மாதம் 8 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அரஃபா தினம் வெள்ளிக்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டார்கள்.
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்