நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

  

Unicode Page

27 கேள்வி : தந்தை ஹராமான முறையில் பணம் ஈட்டுகிறார், அதை மகன் உண்ணலாமா? வட்டி குறித்து தாங்கள் தெளிவான விளக்கம் தரவும். அதாவது வட்டி என்றால் என்ன? இன்ஸ்டால்மென்ட் கூடுமா? (ஹமீது (சுல்பி), யாகூ மெயில் மூலமாக)

    ஒருவர் செய்யும் பாவம் மற்றவரைச் சாராது என்று இஸ்லாம் தெளிவாகவே சொல்கிறது. அதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காணக்கிடைக்கின்றன.

    1. 'பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்' (அல்குர்ஆன் 4:111)

    2. '(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே (பாவத்தை) சம்பாதித்துக் கொள்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்' (அல்குர்ஆன் 6:164)

    3. 'அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே' (அல்குர்ஆன் 2:286)

    4. 'எவன் நேர்வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர்வழியில் செல்கிறான். எவன் வழி கேட்டில் செல்கிறானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். ஒருவன் இன்னொருவனின் சுமையை சுமக்க மாட்டான்.' (அல்குர்ஆன் 17:15)

    இன்னும் குர்ஆனின் பல இடங்களில்,

    5. 'ஒரு ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது' (அல்குர்ஆன் 6:164, 17:15, 39:7, 53:38)

    6. 'அந்த உம்மத்து (சமூகம்) சென்று விட்டது, அவர்கள் சம்பாத்தியவை அவர்களுக்கே. நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்' (அல்குர்ஆன் 2:134,141)

    இந்த வசனங்கள், தந்தை வட்டி போன்ற பாவச் செயலைச் செய்தால் அது மகனைச் சாராது, தந்தையைத்தான் சாரும், தந்தை செய்தவற்றிற்காக மகன் விசாரிக்கப்பட மாட்டார் என்ற கருத்தை விளக்குகிறது.

    வட்டி தொடர்பான தெளிவான முழுமையான விளக்கத்தை கீழ்காணும் பக்கத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

வட்டி சமுதாயத்தின் சாபக்கேடு

\

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

]

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்