
| செய்திகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
தம்மாமில் இஸ்லாமிய கருத்தரங்கம்
தம்மாம், 08.08.2009 சனிக்கிழமை
தம்மாமில் இயங்கி வரும்
இஸ்லாமிய கலாச்சார மையத்தின் (ICC) சார்பாக தம்மாம் - கோபர் கடற்கரை சாலையில்
அமைந்துள்ள ராக்கா பகுதியில் அல் ஸாமில் தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் கடந்த
வெள்ளியன்று (07.08.09) இஸ்லாமிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அஸர் தொழுகைக்குப் பின் அல் ஸாமிலில் பணிபுரியும் மவ்லவி
முஹைதீன் ரஷாதி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து கருத்தரங்கம் துவங்கியது.
அமர்வுத் தலைவர் மவ்லவி நூஹ் மஹ்லரி (IDGC - தம்மாம்) அவர்கள் இக்கருத்தரங்கின்
நோக்கம் மற்றும் பயன்களை பட்டியலிட்டார்.

மௌலவி நூஹ் மஹ்ளரி (IDGC - தம்மாம்)

மௌலவி அலாவுதீன் பாகவி (அல் அஹ்ஸா)
தேனீர் மற்றும் சிற்றுண்டி வினியோகத்திற்குப் பிறகு, மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (KIC – அல்கோபர்) மறுமை குறித்து சபையோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் விதமாக உரையாற்றினார். இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் துவங்கியதே இந்த மறுமை நம்பிக்கை பற்றித் தான் எனக் குறிப்பிட்டவர், இந் நம்பிக்கையினால் ஸஹாபாக்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு பரிசுத்தமாக மாறியது என்பதனை வரலாற்று ரீதியாக எடுத்துரைத்தார்.

மௌலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (KIC - அல்கோபர்)

மௌலவி மன்சூர் மதனி (ICC -தம்மாம்)
மஃஅரிபுக்கு முன் நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டுமென்ற கட்டாயத்தினால் ஒவ்வொரு தலைப்புக்கும் தலா 35 நிமிடங்களே ஒதுக்கப்பட்டன. நேரம் குறைவாக இருந்தாலும் கருத்துக்கள் நிறைவாக எடுத்து வைக்கப்பட்டதனால் பங்கு பெற்ற அனைவரும் பயனடைந்தனர்.

கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் (தமிழ் தஃவா கமிட்டி)
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்