இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

மோடிக்கு விசா மறுப்பு

    குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டே அம்மாநிலத்து முஸ்லிம்களை குறிவைத்து இனப்படுகொலையில் ஈடுபட்ட நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது.

    2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்தின் போது பழியை திட்டமிட்டே முஸ்லிம்களின் மீது போட்டு 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவர் இந்த இரத்தக்காட்டேரி நரேந்திர மோடி.

    ஜனநாயகத்தில் இருக்கும் சந்து பொந்துகளில் ஒளிந்து கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் மோடி, இந்த படுகொலைகளுக்காக இதுவரை தண்டிக்கப்பட வில்லை.

    பால்தாக்கரே முன்னின்று நடத்திய மும்பை படுகொலையின் போதும் 3,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், மதச்சுதந்திரம் பேணப்படக் கூடிய இந்திய ஜனநாயக நாட்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, குஜராத்தில் நரேந்திர மோடி நடத்திய முஸ்லிம் இனப்படுகொலையின் போது 3,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இந்த சமயங்களிலெல்லாம் இந்தியா சர்வ தேச அளவில் மிகப்பெரும் தலைகுனிவை சந்தித்தது.

    இந்திய தேசத்தின் மீதும், மக்களின் மீதும் சட்டங்களின் மீதும் நம்பிக்கை இல்லாத தேச துரோகிகள் தான் தேசபக்தர்களாக வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறார்கள்.

    முப்பை படுகொலையில் ஈடுபட்ட பால்தாக்கரே மஹராஷ்ட்ரா மாநிலத்தை விட்டு பெரும்பாலும் வெளியே செல்வதில்லை, அதனால் அவரைப்பற்றி கவலையில்லை. ஆனால் குஜராத் படுகொலையில் ஈடுபட்ட மோடி இந்தியா முழுவதும் உலா வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.   

    கடந்த முறை தமிழ்நாட்டு பாப்பாத்தி ஜெயலலிதா மோடிக்கு விருந்து கொடுக்க அமைதிப் பூங்காவிற்கு அழைத்தார், மோடி எனும் பயங்கரவாதி மிக பாதுகாப்பாக அரசாங்க பாதுகாப்புடன் வந்தார். அதனை எதிர்த்து பல இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. முஸ்லிம்களின் உயிரை குடித்த இரத்தக்காட்டேரி தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று முழங்கினார்கள்.

    மீண்டும் 11.07.2008 அன்று சென்னை டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்காக மோடி வந்திருந்த பொழுதும் ஆர்பாட்டம் செய்யப்பட்டது, இனப்படுகொலையாளன் தமிழ் மண்ணில் கால் பதிக்கக்கூடாது என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    தெஹல்கா டாட் காம், மோடியின் இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து அம்பலப்படுத்திய பொழுதும் கையாலாகாத காங்கிரஸ் அரசும் சட்டத்துறையும் மோடிக்கு எதிராக துரும்பை கூட அசைக்க வில்லை.

    'முடிந்தால் என்னை தூக்கில் போட்டுப் பாருங்கள்' என்று கூறி வெட்கங்கெட்ட காங்கிரஸ் அரசுக்கு சொரணை வரும் படி பேட்டி கொடுத்தார்.

    2002 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்காக விசாவுக்கு மோடி விண்ணப்பித்த போது அமெரிக்கா அனுமதி மறுத்து, இனப்படுகொலையாளனுக்கு விசா கிடையாது என்று கூறியது நினைவில் இருக்கலாம்.

    எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விசா மறுக்கப்பட்டதோ அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 2008 யிலும் விசா கொடுப்பதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

    பெட்டி மெக்கோலம் என்ற வக்கீல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான கன்டலீசா ரைஸுக்கு எழுதிய கடிதத்தில் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ஒரு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளார். 'மோடிக்கு விசா கொடுப்பது சர்வதேச சட்டதிட்டத்திற்கு எதிரானது' என்று கூறியுள்ளார். ஏனென்றால் அவர் 2002 ல் குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவராவார் என்று கூறியுள்ளார்.

    மதச்சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்ட மோடியின்  மிகநீண்ட ரிக்கார்டு, சர்வதேச மதச்சுதந்திர சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதாக கூறியுள்ளார். அவருக்கு விசா கொடுப்பது, முஸ்லிம்களுக்கும் கிருத்தவர்களுக்கும் எதிரான அவரது கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் அங்கீகரிப்பதாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

    பெட்டி மெக்கோலம் ஒரு வக்கீல் என்று சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். அவர் அரசாங்க துறைகளிலும் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுமட்டுமின்றி, மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் குழுவும் ரைஸுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

    அதில், மோடிக்கு விசா மறுப்பது அமெரிக்காவின் சட்டத்தை பேணுவதற்காக மட்டுமல்ல, மோடியின் மோசமான பேச்சுக்கள், மோசமான கொள்கைகள், மோசமான நடவடிக்கைகள் போன்றவை அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்ற முக்கியச் செய்தியை அவருக்கு சொல்லக் கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க அரசாங்க ஆலோசனைக்குழு, 'மோடிக்கு விசா வழங்கக் கூடாது' என்ற அரசு முடிவை உறுதி செய்யுமாறு வெளியுறவுத்துறையை கேட்டுக் கொண்டுள்ளது. 

    மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்ற முடிவில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை என்று பிளைஸ் டி.காயர் (Chairman of the Commission on International Religious Freedom) கூறியுள்ளார். சட்டப்படி (Immigration and Nationality Act - INA) விசா வழங்குவதற்கு மோடி தகுதியற்றவர் என்பதை வெளிப்படையாக பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அமெரிக்காவில் புஷ் என்ற அரக்கணைத் தவிர பலர் நல்லவர்களாகவே இருக்கிறார்கள், அநியாயக்காரர்களை அடையாளம் கண்டு கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வதில் அமெரிக்க அரசு நிர்வாகிகள் கவனமாகவே இருக்கிறார் என்பதை இந்த செய்தி தெளிவுபடுத்துகிறது.

    மோடியை தனிமைப்படுத்துவோம், சட்டப்படி அவர் செய்த குற்றத்திற்கு தண்டனையை பெற்றுத் தருவோம். அந்த நாள் வெகு விரைவில வரும். 

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்