
| செய்திகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
கராட்சிக் பிடிபட்டான்
ஜுலை: 23, 2008
போஸ்னியாவில் 8,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்த ராடவன் கராட்சிக் பெல்கிரேடில் பிடிபட்டான்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலைக்கு காரணமான இந்தப் படுபாவி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டான்.
இதற்கு முன்பு ஸ்லோபோடான் மிலோசெவிக் கைது செய்யப்பட்டதும், போர் குற்றங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டதும் நினைவிருக்கலாம்.
நீண்ட முடியுடனும் நரைத்த அடர்ந்த தாடியுடனும் கண் கண்ணாடியுடனும் பிடிக்கப்பட்ட சர்வதேச போர் குற்றவாளி டாக்டர் வேலை செய்து கொண்டிருந்நததாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த கராட்சிக் 1995 ல் சாரியாவோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, போஸ்னியா நகரமான செர்பிரீனிகா என்ற நகரத்திலிருந்த 8,000 முஸ்லிம்களை படுகொலை செய்தான்.
இதற்காக சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 11 வருடங்களாக தேடப்பட்டு வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.செர்பிரீனிகா நகரத்து முஸ்லிம் மேயர் அப்துர்ரஹ்மான் மல்கிக், 'கராட்சிக் கைது செய்யப்பட்டதை கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது, அவரது கைது நல்ல செய்தி தான், ஒரு சின்ன திருப்தி, ஆனால் மகிழ்ச்சி அடைவதற்கு வழி ஒன்றும் இல்லை, இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட சொந்தங்களை எதுவும் திருப்பிக் கொண்டு வந்து விடாது' என்று கூறினார்.
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்