இன்டெக்ஸ்

 செய்திகள் இன்டெக்ஸ்

Unicode Page

மகுடம் பதித்த இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி

தம்மாம், ஏப்ரல் 06, 2009

தம்மாம் நகரில் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' நிகழ்ச்சி ஏப்ரல் 4, 2009 வெள்ளிக்கிழமை சரியாக மாலை 5:00 மணிக்கு ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சி தம்மாம் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாரகான் ஆடிடோரியத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தமிழ் பிரிவு சார்பாக நடத்தப்பட்டது.

தம்மாம் தமிழ் தஃவர் கமிட்டியினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதில் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறது அல்லது ஆதரிக்கிறது என்ற திட்டமிட்டு பரப்பப்படும் மீடியாக்களின் பரப்புரையை தகர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறினார்.

எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமான மாற்றுமத நண்பர்கள் குவிந்து விட்டதால் பாரகான் ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது.

தஃவா கமிட்டியினர் அவசர அவசரமாக மேடையைச் சுற்றிலும் இருந்த இடத்தில் நாற்காலிகளை ஏற்பாடு செய்து விருந்தினர்களை அமர வைத்தனர்.

'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் தமிழ் பிரிவு மௌலவி மன்சூர் மதனி அவர்கள் 35 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து 'அல்குர்ஆன் வாழும் அற்புதம்' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட பவர் பாய்ண்ட் வெண்திரையில் காட்டப்பட்டது. இதில் பொறியாளர் ஜகரிய்யா மற்றும் கணினி பொறியாளர் இம்தியாஸ் முயற்சி பாராட்டுக்குரியது.

இதனைத் தொடர்ந்து சிற்றுண்டி பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கும் போதே கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது. பொறியாளர் ஜகரிய்யா மற்றும் மௌலவி மன்சூர் மதனி இருவரும் மாற்றுமத சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை அளித்தார்கள்.

நேரடியாக கேட்கப்பட்ட கேள்விகளோடு, எழுத்து மூலமாக வந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. எழுத்து மூலமாக கேள்விகள் வந்து குவிந்தன. அவைகளுக்கு நேரடியாகவோ மற்றுமோர் சமயத்திலோ பதிலளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மௌலவி உவைஸ் பாகவி நன்றியுரை ஆற்றினார்.

அங்கு வந்திருந்த மாற்றுமத அன்பர்களுக்கு தேவையுடையவர்களுக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு நூல் வடிவமாகவும் சிடி வடிவமாகவும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் திருப்தியுடன் கலைந்து சென்றனர்.

நமது செய்தியாளர்.

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்