
| கவிதைகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
என்ன செய்யப் போகிறீர்?
தமிழில்: அபூ ஹாஜர்
| அரசர்கள் முரசறைந்தனர் | ||
| அன்று, இன்றோ | ||
| அதிபர் ஒருவர் ஆணையிடுகிறார். | ||
| நாகரீகம் வளர்ந்ததென | ||
| நாங்கள் எப்படி நம்புவது? | ||
| நரவேட்டையும் | ||
| நாடுபிடிக்கும் வேட்கையும் | ||
| நசிந்து விட வில்லையே! | ||
| யுத்தத்திற் கெதிராய் | ||
| நித்தம் ஆர்ப்பரிக்கும், சகலரின் | ||
| சப்தங்களும், சங்கு நெறிபட்டு | ||
| நிசப்தங்களாகின்றன. | ||
| சண்டியர்களின் சவடால் மட்டும் | ||
| சாகாவரம் பெறுகின்றன. | ||
| உண்மையில் | ||
| ஊடகங்களின் வளர்ச்சி, உலகிற்கு | ||
| உண்மையுரைக்க அல்ல, மாறாக | ||
| மறைக்கவே பயன்பெறுகின்றது. | ||
| ஜப்பான் தொடங்கி ஈராக் வரை | ||
| சரித்திரம் நெடுக சவக்கடங்குகள் | ||
| சுதந்திரம் என்பது சிலரின் | ||
| தந்திரமாகிப் போனது. | ||
| சுதந்திர தேவி என்பவள் | ||
| அமெரிக்காவிற்கு மட்டும் | ||
| செந்தமானவளோ... | ||
| அப்படித்தான் கருதுகிறார் | ||
| அதிபர் புஷ். | ||
| ஆனால் பாவம் அமெரிக்கர்கள் | ||
| அவர்களின் கருத்துக்கு அங்கே சுதந்திரமில்லை. | ||
| அலை அலையாய் கூடி | ||
| ஆர்ப்பரித்தாலும், | ||
| யுத்த நிறுத்த முடிவு | ||
| சாத்தியமே யில்லை. | ||
| ஏனெனில் | ||
| அதிபரின் கவலையெல்லாம் | ||
| ஆயுத வியாபாரிகளின்... | ||
| ஆலை அதிபர்களின்... | ||
| அசகாய வணிகர்களின்... | ||
| அளவிடாத சுதந்திரம் பற்றித்தானே. | ||
| சுதந்திர வேட்கையொன்று | ||
| சத்தியமாய் இருந்திருந்தால் | ||
| ஷெரோனின் கொடுமையிலிருந்து | ||
| பாலஸ்தீனத்தை பாதுகாக்கலாம். | ||
| பிறர் நலன் நாடுவதே | ||
| பிரதானமாய் இருந்திருந்தால் | ||
| ஆப்பிரிக்க நாடுகளை | ||
| அரவணைத்துச் செல்லலாம். | ||
| இவை ஒன்றும் மெய்யில்லை | ||
| எண்ணெய் மட்டுமே மெய்... | ||
| ஜப்பானில் சாதித்ததென்ன | ||
| சந்ததி சந்ததியாய் | ||
| சரீர குறைபாடு. | ||
| வியட்நாமில் விளைந்ததென்ன | ||
| விலைமாதர்களும் - பால் | ||
| வினை நோய்களும். | ||
| ஆப்கானில் அடைந்ததென்ன | ||
| அகிலமெங்கும் வினியோகிக்க | ||
| அளப்பெரும் அபின் உற்பத்தி. | ||
| அடுக்கடுக்காய் அவலங்கள் | ||
| அத்தனையும் மனித குல நாசங்கள் | ||
| அமெரிக்க கைங்கரியத்தால் | ||
| அகிலம் அடைந்த யோகங்கள்??? | ||
| தாயின் அசுத்தத்தில் | ||
| தப்பிப் பிழைத்தவன் | ||
| தலைகால் புரியாமல் | ||
| தடுமாறித் திரிகின்றான் | ||
| ஆயுதங்களின் அணிவகுப்பில் | ||
| அமைதி தழைக்காது | ||
| அராஜகமே அரங்கேறும்... | ||
| வான்வழி தாக்குதல்கள் | ||
| வன்முறைக்கே வித்திடும்... | ||
| தொழில் நுட்ப மயக்கத்தில் | ||
| துள்ளிக் குதிப்பவர்கள், | ||
| பி-52 பராக்கிரமத்தில் | ||
| பெருமிதம் கொள்பவர்கள் | ||
| 'கொலம்பியா' - ஓடத்தை | ||
| கொஞ்சம் நினைக்கட்டும்... | ||
| வான் வெளியும், புவி வழியும் | ||
| வல்லோன் அல்லாஹ்வுக்கே சொந்தம். | ||
| வாரி சுருட்ட நினைத்தால் | ||
| விழ வேண்டும் நரகத்தில் - இது திண்ணம். | ||
| எண்ணெய் மட்டுமல்ல, எந்த வளமும் | ||
| எவருக்கும் சொந்தமல்ல. | ||
| ஏமாற்றி கொள்ளையடிக்க - மாறாக | ||
| இறைவனுக்கே சொந்தம். | ||
| இயற்கை வளங்கள் | ||
| இறைவனின் வரங்கள். அவன் | ||
| இடும் கட்டளைக்கேற்ப | ||
| இடம் மாறும் அருள்கள். | ||
| அவன் மட்டும் ஆணையிட்டால் | ||
| எண்ணெய் வயல்கள் | ||
| என்றும் வற்றலாம். | ||
| பாலை நிலம், புஷ்ஷின் உள்ளம் போல் | ||
| பாறை நிலமாகலாம். | ||
| இத்தனை இழப்புக்குப்பின் | ||
| இப்படி ஒன்று நடந்து விட்டால் - அதிபரே | ||
| என்ன செய்யப் போகின்றீர்!!! |
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்