
| கவிதைகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
தொழுவோம் வாரீர்
காயல்பட்டணம் ஏ.ஆர்.தாஹா
| தொழுதால் தீரும் | ||
| தொல்லைகள் யாவும் | ||
| தினம் ஐவேளை | ||
| தொழுதிட வேணும் | ||
| மறந்தால் நாசம் | ||
| மறுமையில் மோசம் | ||
| மஹ்ஷர் வெளியில் | ||
| மருகிட நேரும் | ||
| படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான் | ||
| பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான் | ||
| கருவில் உருவாகி நாமிருந்தபோது | ||
| கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான் | ||
| அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால் | ||
| பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே | ||
| மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று | ||
| மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று | ||
| மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே | ||
| மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை | ||
| மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு | ||
| மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு | ||
| முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி | ||
| முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி | ||
| இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும் | ||
| இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும் | ||
| குப்ரின் தீங்கான செயலின்றி வாழ | ||
| கப்ரின் வேதனையில் வீழாது மீள | ||
| சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி | ||
| கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி | ||
| மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில் | ||
| மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில் | ||
| உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம் | ||
| உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம். |
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்