இன்டெக்ஸ்

 கவிதைகள் இன்டெக்ஸ்

Unicode Page

புஷ்ஷுக்கும், ஆதரவாளர்களுக்கும் ஓர் அவசர செய்தி

தமிழில்: அபூ ஹாஜர்
  நாம் இங்கே முன்பே  
     
  இருந்தது போல் இருக்கிறது.  
     
  குதிங்கால்களில் நின்று கொண்டும்...  
     
  விளிம்புகளில் தொங்கிக் கொண்டும்...  
     
  ஒரு சக்திமானின் விநோத விருப்பத்திற்காக!  
     
     
     
  பாறையின் முகட்டை நோக்கும்பொழுது  
     
  கீழே விழுவது பயங்கரத்தை பரிசளிக்கிறது.  
     
  சிறுவர்களின் விழிகளிலும்...  
     
  தாய்மார்களின் இதயங்களிலும்...  
     
  எங்கெங்கும்...  
     
     
     
  நீ உன் நயவஞ்சகத்தை பேசலாம்  
     
  நேர்மையற்ற வார்த்தைகளில்  
     
  நன்மைகளையும் தீமையையும்  
     
  கடவுளின் பெயரால் தூண்டலாம்  
     
  கடவுள் ஏதோ  
     
  அமெரிக்காவை ஈராக்கைவிட நேசிப்பதைப்போல  
     
  செல்வந்தனை ஆசிர்வதித்து  
     
  வறியவனை நிராகரிப்பதைப்போல  
     
  அறிவீனமாக ஏதோ இப்படி செய்வது போல...  
     
     
     
  நீயும் சதாம் ஹுஸைன் மேல் இறங்கிப்  
     
  போயிருக்கிறாய்  
     
  அவனும் அப்படி ஒன்றும் மகானல்ல  
     
  எனவே ஏன் நீங்களிருவரும்  
     
  உங்களுக்கு விருப்பமான ராணுவ உடையுடன்  
     
  ஆயுதங்களையும் களத்தையும் தெரிவு செய்து  
     
  வாட்களின் கூர்மையை வளப்படுத்திக் கொண்டு  
     
  பாலை வெளி நோக்கி ஓடக் கூடாது?  
     
  அங்கே அதிகாலை மூடுபனியில்  
     
  பகல் பொழுதின் வெப்பத்தில்  
     
  நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த  
     
  உதிரங்கள் ஒன்றோடொன்று கலந்து  
     
  வறண்ட பாலையில் உதிர...  
     
  உங்களில் ஒருவர் மரணிக்க...  
     
  மற்றவர் பாடையில் தூக்கப்பட...  
     
  வெற்றி வெற்றி என கூக்குரலிட...  
     
  பிண வாடையில் ஓநாய்கள் பின்தொடர...  
     
  நீங்கள் ஓயாது போரிடுங்கள்.  
     
  அப்பாவிகளை மட்டும் விட்டுவிடுங்கள்.  

    நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்