| இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு | Unicode Page | Font Help |
இப்னுமாஜா 14
14 حَدَّثَنَا أَبُو مَرْوَانَ مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ ثَنَا إِبْرَاهِيْمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيْمَ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِيْهِ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّم قَالَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هٰذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்)
நிராகரிக்கப்படும்' என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம் அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
நமது விளக்கம்:
திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாமிய மார்க்கமாகும். அல்லாஹ்வும் அவனது
தூதரும் சொல்லாததும் அனுமதிக்காததும் மார்க்கமாக ஆகாது.
இந்தக் கருத்தை அல்லாஹ் திருமறையில் கீழ்கண்டவாறு சொல்கிறான்.
'இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான்
உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்' (அல்குர்ஆன் 5:3)
பரிபூரணப்படுத்தப்பட்ட மார்க்கத்தில்
புதியதாக ஒன்றை சேர்க்க இயலாது என்பது இந்த வசனத்தின் கருத்தாகும்.
அல்குர்ஆனில் அல்லாஹ் சொன்னபடி நடப்பதும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் படி
நடப்பதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
இவையல்லாதவைகளை புதிதாக உருவாக்குவது
பித்அத் எனும் நூதன பழக்கமாகும். அதை பின்பற்றுவதற்கான நன்மை ஏதும் கிடைக்காது,
அது இறைவனால் நிராகரிக்கப்படும் என்பது இந்த ஹதீஸின் விளக்கமாகும்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்