இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு

இன்டெக்ஸ்

அத்தியாயங்கள்

பாடங்கள்

Unicode Page Font Help

இப்னுமாஜா 13

13 حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ الجَهْضَمِيُّ ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ فِي بَيْتِهِ أَنَا سَأَلْتُهُ عَنْ سَالِمِ أَبِي النَضْرِ ثُمَّ مَرَّ فِي الحَدِيْثِ قَالَ أَوْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعِ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُوْلَ اللهِ  صلى الله عليه وسلم  قَالَ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيْكَتِهِ يَأْتِيْهِ الأَمْرُ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُوْلُ لاَ أَدْرِي ماَ وَجَدْنَا فِي كِتَابِ اللهِ اتَّبَعْنَاهُ

 
'நான் கட்டளையிட்ட, அல்லது தடுத்த ஒரு செய்தி ஒருவனுக்கு கிடைக்கும் போது, '(அதெல்லாம்) எனக்குத் தெரியாது அல்லாஹ்வின் வேதத்தில் எதை பெறுகிறோமோ அதையே பின்பற்றுவோம்' என்று ஆசனத்தில் சாய்ந்து கொண்டு (அதாவது அலட்சியமாக) ஒருவன் கூறக்கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதி 2800, அபூதாவூத் 4605  ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

நமது விளக்கம்:

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாகும் இது. பிற்காலத்தில் குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ்கள் தேவையில்லை அல்லது குர்ஆனுக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று சொல்லும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் விளக்குகிறது.

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்

இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்