| இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு | Unicode Page | Font Help |
இப்னுமாஜா 9
9 حَدَّثَنَا يَعْقُوْبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ ثَنَا الْقَاسِمُ بْنُ نَافِعٍ ثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيْهِ قَالَ قَامَ مُعَاوِيَةُ خَطِيْبًا فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ لاَ تَقُوْمُ السَّاعَةُ إِلاَّ وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرُوْنَ عَلَى النَّاسِ لاَ يُبَالُوْنَ مَنْ خَذَلَهُمْ وَلاَ مَنْ نَصَرَهُمْ
ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்த எழுந்தார்கள். உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு, 'தங்களை எதிர்ப்பவர்களையும் ஆதரிப்பவர்களையும் பொருட்படுத்தாத ஒரு சாரார் மக்களை மிகைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் புஹாரி 3641,7460, முஸ்லிம் 3887, அஹ்மத் 16956,16973 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றள்ளது. இந்த நூல்களில் 'உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு,' என்ற பகுதி இடம் பெறவில்லை.)
விளக்கம்:
இந்த ஹதீஸில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஓர் இஸ்லாமிய அழைப்பாளனிடம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று இங்கே
சொல்லப்பட்டிருக்கிறது. தங்களை எதிர்ப்பவர்களையும் ஆதரிப்பவர்களையும் கண்டு கொள்ளக்
கூடாது என்பது அந்தப்பண்பு.
மற்றொன்று, இப்படிப்பட்டவர்கள் ஒரு காலத்தில் மிகைத்துக் கொண்டே செல்வார்கள்
அப்போது மறுமை நாள் ஏற்படும், அதாவது இது மறுமைநாளின் அறிகுறிகளுள் ஒன்றாகும். இதை
புஹாரியில் உள்ள ஹதீஸ் தெளிவாகவே கூறுகிறது.
'இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்து கொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமை
நாள்) வந்து விடும்' என்றும் முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.
'இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்' என்றும் முஆவியா (ரலி) அவர்கள்
கூறியதாக புஹாரியில் உள்ளது. இந்தக் கூற்றும் மறுமை நாளின் நெருக்கத்தில் இந்நிலை
உருவாகும் என்பதற்கான ஆதாரமாகும்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்