இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு

அத்தியாயங்கள் பக்கம்

Unicode Page Font Help

இப்னுமாஜா 8

   8 حَدَّثَنَا أَبُو عَبْدِ اللهِ قَالَ ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيْحٍ ثَنَا بَكْرُ بْنُ زُرْعَةَ قَالَ سَمِعْتُ أَبَا عِنَبَةَ الْخَوْلاَنِيَّ وَكَانَ قَدْ صَلَّى الْقِبْلَتَيْنِ مَعَ رَسُوْلِ اللهِ  صلى الله عليه وسلم  قَالَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ  صلى الله عليه وسلم  يَقُوْلُ لاَ يَزَالُ اللهُ يَغْرِسُ فِي هَذَا الدِّيْنِ غَرْسًا يَسْتَعْمِلُهُمْ فِي طَاعَتِهِ

'இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான்' என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத் 17817, இப்னு ஹிப்பான் 326 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

விளக்கம்:

அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கி தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான் என்பதில் 'தனது சேவைக்காக' என்பது குறிப்பாக மார்க்க பிரச்சாரத்தையே குறிக்கும்.

அதற்காக மார்க்கப் பிரச்சாரத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று நாம் சும்மா இருந்து விடக்கூடாது. ஏனெனில் நாமும் அதை செய்ய வேண்டும் என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் இருப்பதைக் காணலாம்.

'...சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்ளுங்கள்...' (அல்குர்ஆன் 103:03)

'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!...' (அல்குர்ஆன் 16:125)

'என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதனை பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள்' என்பது நபிமொழி. (நூல்கள்: புகாரி 3461, திர்மிதி 2806, தாரிமி 545, அஹ்மத் 6486,6888,7006, இப்னு ஹிப்பான் 6256)

அழைப்புப்பணி செய்வது நம்மீது கடமை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தாலும் இவை நாம் அடிக்கடி செவியுற்றவைகளாகும்.

இந்த ஹதீஸிலிருந்து இன்னொரு விஷயத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

'மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்' (அல்குர்ஆன் 3:104)

நல்லதை ஏவி, தீயதை தடுக்கக்கூடிய ஒரு கூட்டம் உங்களிலிருந்தே இருக்கட்டும் என்பதற்கு ஏற்ப அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்குகிறான் என்பதும் இதன் விளக்கமாகும்.

\

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்

]

இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்