| இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு | Unicode Page | Font Help |
இப்னுமாஜா 6
6 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ثَنَا شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيْهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُوْرِيْنَ لاَ يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُوْمَ السَّاعَةُ
'யுக முடிவு நாள் வரை எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் (இறைவனால் உதவி) செய்யப்படுபவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தம் தந்தை வழியாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 4715, திர்மிதி 2330, அஹ்மத் 15635, இப்னு ஹிப்பான் 61 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸில், 'வழிகெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன்' என்ற வாசகம் ஹதீஸின் ஆரம்பத்தில் கூடுதலாக இடம் பெறுகிறது.)
விளக்கம்:
இந்த ஹதீஸில் நான்கு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
1. மக்களில் ஒரு பிரிவினருக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருப்பான்.
2. அந்த உதவி யுக முடிவு நாள் வரை நடக்கும்.
3. அவர்களை எதிர்ப்பவர்கள் எந்த தீங்கும் செய்ய முடியாது.
4. வழிகெடுக்கும் தலைவர்கள் பற்றிய அச்சம்.
1. மக்களில் ஒரு பிரிவினருக்கு இறைவன்
உதவி செய்து கொண்டிருப்பான்.
ஒரு பிரிவினருக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருப்பான் என்பதற்கு மிகத் தெளிவான
சான்று பத்ருப் போர்க்களமாகும்.
அல்லாஹ் சொல்கிறான்: ''பத்று'' போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த
போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்;. ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 3: 123)
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்; ''உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட
மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று.
(அல்குர்ஆன் 3: 124)
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல்
வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம்
வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். (அல்குர்ஆன் 3: 125)
2. அந்த உதவி யுக முடிவு நாள் வரை
நடக்கும்.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான், 'அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்);
அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்;
மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 30:05)
அல்லாஹ், தான் விரும்பியவருக்கு உதவி புரிகிறான். அது யுக முடிவு நாள் வரை நடந்து
கொண்டிருக்கிறது.
3. அவர்களை எதிர்ப்பவர்கள் எந்த
தீங்கும் செய்ய முடியாது.
'நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனும் இருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு
எந்தத் தீமையும் செய்யாது....' (அல்குர்ஆன் 3:120)
'ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்,
நீங்கள் நேர்வழியைப் பின் பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு
தீங்கும் செய்ய முடியாது...' (அல்குர்ஆன் 5:105)
இந்த வசனங்களின் கருத்தை அப்படியே நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள் என்பதை
இங்கே காணலாம்.
4. வழிகெடுக்கும் தலைவர்கள் பற்றிய
அச்சம்.
இதற்கு உதாரணத்திற்கு நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை, நாம் வாழும் காலத்திலேயே
அறிஞர் என்ற பெயரில் தலைவர்களாக ஆனவர்கள் முதலில் திருவாளர் பரிசுத்தம் என்று
இருந்தவர்கள் பின்னர் எவர் வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற
நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதையும் தான் விலை போனது போதாதென்று சமுதாயத்தையே
பிறரிடம் அடகு வைத்ததையும் அப்படிப்பட்டவர்களை பின்பற்றக் கூடாது என்பதையும் இங்கே
விளங்கிக் கொள்ளலாம்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்