| இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு | Unicode Page | Font Help |
இப்னுமாஜா 5
5 حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ الدِّمَشْقِيُّ ثَنَا مُحَمَّدُ بْنُ عِيْسٰى بْنِ سُمَيْعٍ حَدَّثَنَا إِبْرَاهِيْمُ بْنُ سُلَيْمَانَ الأَفْطَسُ عَنِ الوَلِيْدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ الْجُرَشِيِّ عَنْ جُبَيْرِ بْنُ نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَذْكُرُ الْفَقْرَ وَنَتَخَوَّفُهُ فَقَالَ آلْفَقْرَ تَخَافُوْنَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُصَبَّنَّ عَلَيْكُمُ الدُّنْيَا صَبًّا حَتَّى لاَ يُزِيْغَ قَلْبَ أَحَدِكُمْ إِزَاغَةً إِلاَّ هِيَهْ وَأَيْمُ اللهِ لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ ، قَالَ أَبُو الدَّرْدَاءِ صَدَقَ، وَاللهِ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم تَرَكَنَا وَاللهِ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ
வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது ஆணை! வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உண்மையே உரைத்தார்கள். (அவர்கள் கூறியவாறு) எங்களை இரவும் பகலும் ஒன்று போல் இருக்கின்ற வெள்ளை வெளேர் என்ற பாதையிலேயே விட்டுச் சென்றார்கள்' என்றும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.
ஹதீஸின் விளக்கம்:
இந்த ஹதீஸின் முதற்பகுதியல் நபி (ஸல்) அவர்கள் ஒரு முன்னறிவிப்பு செய்கிறார்கள். அதை
நமது வாழ்நாட்களிலேயே கண்டுவிட்டோம். அது உண்மைப்படுத்தப்பட்டு விட்டது. நபி (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.
'(வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்!'
- சவூதி அரேபியா ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்தது, அது இப்போது
உலகஅளவில் எவ்வாறு இருக்கிறது? கருப்புத் தங்கத்தால் சவூதி அரேபியாவில் செல்வம்
பொழியப்படவில்லையா? நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் சவூதி அரேபியாவைச்
சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் அடுத்துச் சொல்வது தான் மிக முக்கியமானது, 'உங்களின் உள்ளத்தை (நல்வழியை
விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும்',
மனிதனுக்கு அபரிமிதமான பணம் வந்தால், அல்லாஹ்வைப்பற்றிய பயம் நீங்கிப் போகும்.
இதுதான் மனிதனின் இயல்பு. ஆனால் மனிதன் இயல்புக்கு மாற்றமாக இருக்க பழகிக் கொள்ள
வேண்டும்.
எத்தனையோ நபித்தோழர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூட கதீஜா (ரலி)
திருமணம் முடித்த போது பெரும் செல்வந்தராக இருந்தார்கள்.
முஸ்லிம்களிடம் பணம் அதிகம் அதிகம் இருப்பதில் தவறில்லை, ஆனால் அல்லாஹ்வின் நினைவு அதை விட அதிகமாக இருக்கவேண்டும்.
இந்த ஹதீஸின் இந்தப் பகுதி, 'அல்லாஹ்வின் மீது ஆணை! வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்' இப்னுமாஜா 43, அஹ்மத் 17182 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தன்மைகளில் ஒன்றையும் அவர்கள் மீது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தூதர் என்ற பொறுப்பையும் எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளார்கள் என்பதையும் தெளிவாகச் சொல்கிறார்கள். இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கி விட்டார்கள் என்பது இதன் பொருளாகும்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்