| இப்னுமாஜா நபிமொழித் தொகுப்பு | Unicode Page | Font Help |
இப்னுமாஜா 3
3 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيْعٌ عَنِ الأَعْمَشَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللهَ
எனக்குக் கட்டுப்பட்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாவான், எனக்கு மாறு செய்பவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸோடு, 'என்னால் நியமிக்கப்பட்ட அமீருக்கு கீழ்படிந்தவர் எனக்கு கீழ்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்' என்ற வாசகங்கள் கூடுதலாக, புஹாரி 7137, முஸ்லிம் 4518, அஹ்மத் 7428 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இப்னுமாஜா 2859 லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் விளக்கம்:
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:
(நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்
பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்;
மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்''.
(அல்குர்ஆன் 3:31)
(நபியே! இன்னும்) நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும்
வழிப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் -
நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை''. (அல்குர்ஆன் 3:32)
இந்த ஹதீஸ் மேற்சொன்ன திருமறை வசனங்களுக்கு விளக்கமாக அமைந்திருக்கிறது. நபி (ஸல்)
அவர்களை பின்பற்றுவது என்பது அல்லாஹ்வை நேசிப்பதாகும். அல்லாஹ்வை நேசிப்பது என்பது
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும். நபி (ஸல்) அவர்களை பின்பற்றினால் அல்லாஹ் நம்மை
நேசிக்கிறான், பாவங்களை மன்னிக்கிறான்.
இன்னும், அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டு நடக்க வில்லையானால் அவன் காஃபிர் என்ற
நிலைக்கு வந்து விடுவான், காபிர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. இது இந்த ஹதீஸின்
விளக்கமாகும்.
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்