| ஹதீஸ்கள்: 729 முதல் 740 வரை | Unicode Page | Font Help |
பாடம்: 6 இகாமத் வாசகங்களை ஒவ்வொரு தடவை கூறுதல்
இப்னுமாஜா 729
தொழுகைக்கு அழைப்பதற்கு அடையாளமாக
மக்கள் ஏதேனும் ஒரு வழிமுறையைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பிலால் (ரலி)
அவர்கள் பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு தடவை கூறுமாறும்,
இகாமத்தின் வாசகங்களை ஒவ்வொரு தடவைக் கூறுமாறும்
கட்டளையிடப்பட்டார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம்,
அஹ்மத், அபூதாவூத், நஸயீ,
திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது)
இப்னுமாஜா 730
பிலால் (ரலி) அவர்கள் பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு தடவை கூறுமாறும்,
இகாமத்தின் இகாமத்தின் வாசகங்களை ஒவ்வொரு தடவைக் கூறுமாறும்
கட்டளையிடப்பட்டார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இப்னுமாஜா 731
நிச்சயமாக பிலாலின் பாங்கு இரண்டிரண்டு தடவைகளாகவும் அவரது இகாமத் ஒவ்வொரு
தடவையாகவும் இருந்தது என்று ஸஃது அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அம்மார் என்பவர் பலவீனமானவர். ஆயினும்
இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன)
இப்னுமாஜா 732
நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பிலால் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் பாங்கு
சொல்லியதையும், ஒவ்வொரு தடவை இகாமத் சொல்லியதையும் நான்
கண்டேன் என்று அபூராபிவு (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான மஃமர் இப்னு முஹம்மத் என்பவர் அனைவராலும்
பலவீனமாகக் கருதப்பட்டவர்.)
பாடம்: 7 பள்ளியில் இருக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் வெளியேறலாகாது.
இப்னுமாஜா 733
நாங்கள் அபூஹ{ரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது
முஅத்தின் பாங்கு சொன்னார். உடனே ஒரு மனிதர் பள்ளியிலிருந்து வெளியேறலானார். அவர்
பள்ளியை விட்டு வெளியேறும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு,
'நிச்சயமாக அவர் அபுல்காசிம் (அதாவது நபியவர்கள்) அவர்களுக்கு மாறு செய்து
விட்டார்" என்று குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூல்களிலும் இந்த
ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
இப்னுமாஜா 734
யார் பள்ளியில் இருக்கும் போது பாங்கைக் கேட்டு தேவை எதுவும் இல்லாமலும் திரும்பி
வரும் எண்ணமில்லாமலும் வெளியேறுகிறாரோ அவர் முனாபிக் ஆவார் என்று நபி (ஸல்)
கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான இப்னு அபீபர்வா என்பவரும் ஐந்தாவது
அறிவிப்பாளரான அப்துல் ஜப்பார் இப்னு உமர் என்பவரும் பலவீனமானவர்கள்.)
பள்ளிவாயில்கள்,
ஜமாஅத்துகள் பற்றிய அத்தியாயம்.
பாடம்: 1 அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் கட்டுவது
இப்னுமாஜா 735
அல்லாஹ்வின் திருப்பெயர் நினைவு கூறப்படுவதற்காக யார் ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ
அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு இல்லத்தைக் கட்டுகிறான் என்று நபி (ஸல்)
கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: உமர் (ரலி) வழியாக அறிவிக்கும் உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் சுராகா
என்பவர் உமர் (ரலி) அவர்களிடமிருந்து எதனையும் செவியுறவில்லை என்பதால் இது
அறிவிப்பாளர் வரிசைத் தொடர் அறுந்ததாகும். எனினும் பின்வரும் ஹதீஸின் காரணமாக இது
ஹஸன் எனும் நிலைக்கு உயர்கின்றது.)
இப்னுமாஜா 736
யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில்
ஒரு வீட்டைக் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூறியதாக உஸ்மான் பின் அப்பான் (ரலி)
அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம்
பெற்றுள்ளது.)
இப்னுமாஜா 737
மேற்கூறிய ஹதீஸ் அலி (ரலி) வழியாக இங்கே அறிவிக்கப்படுகின்றது. 'தனது சொந்தப்
பணத்தில்" என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
இப்னுமாஜா 738
புறாக்கள் முட்டையிடும் பள்ளம் அளவுக்கோلل அல்லது அதை விட சிறியதாகவோ யார்
அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியைக் கட்டுகிறாரோ அவருக்காக சுவர்க்கத்தில் அல்லாஹ் ஒரு
இல்லத்தைக் கட்டுகிறான் என்று நபி (ஸல்) கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: 'புறாக்கள் முட்டையிடும் பள்ளம்" என்பது சிறிய அளவைக் குறிக்க அரபு
மொழியில் பயன்படுத்தப்படுகின்றது. புறாக்கள் முட்டையிடும் பள்ளம் அளவு இடத்தில் ஒரு
மனிதர் கூட தொழ முடியாது என்பதால் சிறிய அளவு என்று புரிந்து கொள்க.)
பாடம்: 2
பள்ளிவாயில்களை உறுதிமிக்கதாக கட்டுதல்
இப்னுமாஜா 739
மனிதர்கள் பள்ளிவாயில்கள் பற்றி தங்களுக்கிடையில் பெருமையடிக்கும் வரை யுகமுடிவு
நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி)
அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: அபூதாவூத், நஸயீ,
தாரிமீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
இப்னுமாஜா 740
கிறித்தவர்கள் தங்களின் சர்ச்களை மிகவும் உயரமாக எழுப்பியது போன்றும் நீங்கள்
எனக்குப் பின் உங்கள் பள்ளிவாயில்களை உயரமாக எழுப்புவீர்கள் என்று நான் கருதுகிறேன்
என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இதன் ஐந்தாவது அறிவிப்பாளராகிய ஜுபாரா இப்னுல் முகல்லிஸ் என்பார் பெரும்
பொய்யராவார்.)
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
] |
இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்