இன்டெக்ஸ்

 நூல்கள் இன்டெக்ஸ்

Unicode Page

 

'இஸ்லாமியச் சிந்தனை'

 
 

நன்றி: தினமணி - 07.09.2003

ஏவி.எம் ஜாபர்தீன் அண்ட் நூர்ஜஹான் அறக்கட்டளை சார்பில் 'இஸ்லாமியச் சிந்தனைகள்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மது ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் வரலாறு, கல்வி மற்றும் பொருளாதார நிலை, புனிதப் போர் விளக்கம் உள்ளிட்டவை குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.100.

    இந்நூலை வெளியிட்டு கவிஞர் அப்துல் ரஹ்மான் பேசியதாவது:

    முஸ்லிம்களிடையே பரவியுள்ள சில நோய்களை இந்நூலில் அதன் ஆசிரியர் தத்ரூபமாக எடுத்துரைக்கிறார். அத்துடன் நிற்காமல் அந்நோய்களுக்கான மருந்துகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தில் தீவிரவாதத்துக்கு இடம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் உள்ள சில முக்கியமான அத்தியாயங்களைத் தொகுத்து அவற்றை குறைவான விலையிலோ இலவசமாகவோ வெளியிட வேண்டும் என்றார்.

    (இந்த நூல் வெளியீட்டு விழாவில் பல முக்கியஸ்தர்கள் பங்கு கொண்டதாக தினமணி கூறுகிறது)

 
 

   நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்